இளநரையை போக்கும் சீயக்காய்

சீயக்காய் தயாரிக்கும் முறை

சீயக்காய் பவுடரை தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும், உடல் உஷ்ணமும் குறையும்,பித்தம் குறையும், இளநரை சரியாகும்,தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையானவை:
சீயக்காய்- 1 கிலோ 
செம்பருத்திப்பூ - 100 கிராம் (உலர்ந்தது) 
பூலாங்கிழங்கு – 100 கிராம் 
எலுமிச்சை தோல் (காய வைத்தது)- 10 
பச்சை பயறு – கால் கிலோ 
மரிக்கொழுந்து (வாசனைக்கு) – 20 குச்சிகள் 
கரிசலாங்கண்ணி இலை – 100கிராம் (உலர்ந்தது) 
ரோஜாபூ - 100கிராம் (உலர்ந்தது) 
ஆவாரம்பூ - 100கிராம்(உலர்ந்தது) 
வெந்தயம் - கால் கிலோ
கறிவேப்பிலை - 50 கிராம்
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம். 
 சீயக்காய் பவுடரை சாதம் வடித்த தண்ணீர் அல்லது வெந்நீர் அல்லது வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம்.  

No comments:

Post a Comment