இளநரையை போக்கும் சீயக்காய்

சீயக்காய் தயாரிக்கும் முறை

சீயக்காய் பவுடரை தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும், உடல் உஷ்ணமும் குறையும்,பித்தம் குறையும், இளநரை சரியாகும்,தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையானவை:
சீயக்காய்- 1 கிலோ 
செம்பருத்திப்பூ - 100 கிராம் (உலர்ந்தது) 
பூலாங்கிழங்கு – 100 கிராம் 
எலுமிச்சை தோல் (காய வைத்தது)- 10 
பச்சை பயறு – கால் கிலோ 
மரிக்கொழுந்து (வாசனைக்கு) – 20 குச்சிகள் 
கரிசலாங்கண்ணி இலை – 100கிராம் (உலர்ந்தது) 
ரோஜாபூ - 100கிராம் (உலர்ந்தது) 
ஆவாரம்பூ - 100கிராம்(உலர்ந்தது) 
வெந்தயம் - கால் கிலோ
கறிவேப்பிலை - 50 கிராம்
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம். 
 சீயக்காய் பவுடரை சாதம் வடித்த தண்ணீர் அல்லது வெந்நீர் அல்லது வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம்.  

Potato & Castor Oil Mask for Sun Tan

Potatoes are a great sun tan removing agents and work fine as a facial cleanser as well. They help in improving the skin tone and texture. By adding cucumbers with it, it will hydrate and moisturize the skin as well. Along with the castor oil benefits for skin, the mask helps in making the skin shine bright in no time. g the skin, and washing off free radicals that cause pimples and acne.
Ingredients:
Potato - One
Half a cucumber
Castor oil - One tablespoon
Method:
  • In a mixer, grate one potato and half a cucumber to paste
  • To the paste, add one tablespoon castor oil and apply the mask on the face and neck areas
  • Let it sit for 20-25 minutes and thereafter wash it off with cold water
  • Repeat the process weekly for best results.

Avocado & Castor Oil Face Mask

Avocado helps in reducing wrinkles as well as signs of aging that includes dry and dull skin. Due to its smooth and buttery texture avocado gets gelled easily with the skin, leaving it soft and supple. With the help of castor oil, it also helps in treating sun burn.
Ingredients:
Avocado - One
Castor oil - One tablespoon 

Method:
  •  In a bowl, de-seed one ripe avocado and mash it to pulp
  • Then add one tablespoon castor oil and mix it together to form a paste
  • Apply the paste on the face evenly, using circular motion and leave it on for 30-40 minutes
  • Wash it off with cold water and pat dry
  • Repeat the process at least twice a week for flawless skin results.

பீட்ரூட்-கோலா உருண்டை



தேவையானவை:
துருவிய பீட்ரூட் - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறிய துண்டு
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன் (அ) தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
பீட்ரூட் துருவல், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு இவற்றுடன் தேவையான அளவு எடுக்கவும்.

அதன் பின்னர் மிளகாய்த் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். 

பிசைந்த கலவையை உங்களுக்குப் பிடித்த வடிவில் உருட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


உருளைக்கிழங்கு பிரியாணி (அ) புலாவ்

தேவையானவை
பாசுமதி அரிசி - 1 1/2 கப்

உருளைக்கிழங்கு - 2
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 3
ஏலக்காய் - 4
பட்டை - 1
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :

கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க பின்னர் அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, வதக்கவும்.

அடுத்து அதில் அரிசியைக் கழுவி போட்டு, சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, குக்கரை மூடி 4 விசில் விட்டு, 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து, இறக்க வேண்டும்.

பின்பு விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, 10 நிமிடம் குக்கரை மூடி வைத்து, பின் திறந்தால், சூப்பரான உருளைக்கிழங்கு பிரியாணி ரெடி!!!
குறிப்பு -
பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற விடவும். 



பிரியாணி இலை நன்மை


பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால், வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி, வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும் பல அரோமாதெரபிகளில் சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.
பிரியாணி இலையைக் கொண்டே எளிதில் மனதை அமைதியடையச் செய்யலாம்.
இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.

சாம்பார் பொடி -1

தேவையானவை:
தனியா /கொத்தமல்லி விதை            - 1000 g
வர மிளகாய்                       -  500 g
கடலை பருப்பு      - 200g
அரிசி                          - 100g
சீரகம்              - 100g
மிளகு                        - 50g
பெருங்காயம்                -50g
மஞ்சள்                   - 20 g
கறிவேப்பிலை                - 10g
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக அளந்து ஒரு தட்டில் கொட்டி வெயிலில் நன்றாக காயவைக்கவும்.

மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம்.

குறிப்பு - 
வறுக்கும் சமயம் மிதமான தீயில் வறுப்பதும், ஆறிய பின்னே மிக்சியில் அல்லது மிஷினில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
காற்றுப்புகாத ஜாடியில் வைத்து ஈரக் கைகளால் தொடாமல் பயன் படுத்தவேண்டும்.